×

வங்கக் கடலில் உருவானது ‘ஆம்பன்’ புயல்!..மே 20-ந் தேதி மேற்குவங்கம் ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என அறிவிப்பு

டெல்லி: வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இது மே 20-ம் தேதி மேற்கு வங்கம் - வங்கதேசத்தையொட்டிய பகுதியில் கரையை கடக்கும் எனவும் கூறியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றிருப்பதாகவும், இதுமேலும் வலுப்பெற்று இன்று மாலை புயலாக வலுப்பெறும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

வங்கக்கடலில் உருவான இந்த புதிய புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. ஆம்பன் புயல் வரும் 20-ந் தேதி மேற்குவங்காளம் மற்றும் ஒடிசா அருகே நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான ஆம்பன் புயல் வரும் மே 20-ந் தேதி மேற்கு வங்காளம் - வங்காளத்தேசத்தை ஒட்டிய கடற்பகுதியில் கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளதாவது ; தென் மேற்கு வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்தம் புயல் ஆனது சென்னைக்கு தென் கிழக்கே 670 கி.மீ தொலைவில் ஆம்பன் புயல் மையம் கொண்டுள்ளது. வடமேற்கு திசையில் மணிக்கு 16கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என தெரிவித்துள்ளார். மேலும்.இந்தப்புயலானது மே 20 ஆம் தேதி வங்கக் கடல், மேற்குவங்கத்தை ஒட்டிய பகுதிகளில் ஆம்பன் கரையைக் கடக்கும் என தெரிவித்துள்ளர். இதனால் தமிழகத்தில் நேரடி மழை இருக்காது, ஆனால் புயல் விலகி செல்வதால் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

Tags : storm ,Bay of Bengal West Coast , Bengal Sea, Amban, Storm, West Bank
× RELATED மும்பையை சூறையாடிய புழுதிப்புயல்...